

கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. மத்திய ஆசியாவிலுள்ள மலைப்பாங்கான நாடு.
2. இங்குள்ள மலைகளில் 700 சதுர கிலோமீட்டர்களுக்கு பனியால் மூடப்பட்டிருக்கிறது. துருவப் பிரதேசங்களைத் தவிர்த்து, அதிகப் பனி இங்குதான் இருக்கிறது.
3. ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த நாடு. 1991-ல் சுதந்திரம் பெற்றது.
4. பட்டுச்சாலை என்று அழைக்கப்பட்ட தொன்மையான வணிகப் பாதை இதன் வழியாகச் செல்கிறது.
5. நுரெக் அணை, நீரிலிருந்து மின்சாரம் எடுப்பதற்காக கட்டப்பட்டது. உலகின் மிக பிரம்மாண்டமான அணைக்கட்டுகளில் ஒன்று.
6. 10 கி.மீ. தூரத்தில் 900 நதிகள் இருக்கின்றன.
7. இந்த நாட்டின் தலைநகரம் டுஷான்பே.
8. இங்குள்ள மிகப் பெரிய ஏரி காரகுல்.
9. தேசிய விளையாட்டு குஸ்தி.
10. அலுமினியம், பருத்தி போன்றவை முக்கியமான ஏற்றுமதி பொருட்கள்.
விடை: தஜிகிஸ்தான்.