

மலை வளருமா, டிங்கு?
- ர. தக்ஷணா, 5-ம் வகுப்பு, தீக்ஷா வித்யா மந்திர், ஆனைமலை.
மலைகள் வளர்வதில்லை தக்ஷணா. ஆனால், புவியின் மேலடுக்கில் இருக்கும் டெக்டானிக் தகடுகள் நகரும்போது, மேலே இருக்கும் மலைகளின் உயரம் சிறிது கூடவோ குறையவோ செய்யும். செயல்படும் நிலையில் இருக்கும் எரிமலைகளின் மேல் இருக்கும் மலைகள், எரிமலை வெடிப்பு காரணமாக உயர்கின்றன.
மா, பலா, வாழை ஆகிய கனிகளை ஏன் முக்கனிகள் என்று அழைக்கிறோம், டிங்கு?
- ஹ. பிரணவ் ராகவ், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
தமிழ்நாட்டில் அதிகமாக விளையும் பழ வகைகளில் மா, பலா, வாழை மூன்றும் முக்கியமானவை. சத்துகள் நிறைந்தவை. ருசியானவை. மருத்துவக் குணம் நிறைந்தவை. அதனால், இந்த மா, பலா, வாழை மூன்று கனிகளையும் முக்கனிகள் என்று முக்கியத்துவம் கொடுத்து அழைக்கிறார்கள், பிரணவ் ராகவ்.