இது எந்த நாடு? 43: கின்னஸை உருவாக்கிய நாடு

இது எந்த நாடு? 43: கின்னஸை உருவாக்கிய நாடு
Updated on
1 min read

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. இது ஐரோப்பாவில் உள்ள ஒரு தீவு நாடு. எங்கும் பசுமை சூழ்ந்திருப்பதால் ‘மரகதத் தீவு’ என்றும் அழைக்கப்படுகிறது.

2. கோட்டைகள் நிறைந்த நாடு.

3. சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட நாடு. பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடுத்த, பிளாஸ்டிக் பைகளுக்கு வரி விதித்த முதல் நாடு.

4. இங்கே பாம்புகள் இல்லை.

5. இந்த நாட்டின் வட பகுதி ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஆட்சியில் இருக்கிறது.

6. தலைநகர் டப்ளின்.

7. கலிவரின் பயணங்கள் நாவலை எழுதிய ஜொனாதன் ஸ்விஃப்ட், ஆஸ்கர் வைல்டு இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.

8. குத்துச்சண்டை விளையாட்டில் பிரபலமான நாடு.

9. ஆர்தர் கின்னஸ் இந்த நாட்டைச் சேர்ந்தவர். இவர் உருவாக்கியதே கின்னஸ் சாதனை அமைப்பு.

10. இலக்கியத்துக்கான நோபல் பரிசும் ஆஸ்கர் விருதும் வென்ற ஒரே மனிதர் ஜார்ஜ் பெர்னாட்ஷா இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in