இது எந்த நாடு? 44: 7 அமீரகங்களைக் கொண்ட நாடு

இது எந்த நாடு? 44: 7 அமீரகங்களைக் கொண்ட நாடு
Updated on
1 min read

கீ

ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. பாரசீக வளைகுடாவில் அரேபியத் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு.

2. 1971-ம் ஆண்டு விடுதலைப் பெற்றது.

3. உலகிலேயே நான்காவது எண்ணெய் வளம் மிக்க நாடு.

4. அஜ்மான், துபாய், ஃபுஜைரா, ரஸ் அல்-கைமா, ஷார்ஜா, உம் அல்-குவைன், அபு தாபி என்ற ஏழு அமீரகங்களைக் கொண்டது.

5. இவற்றில் அதிக மக்கள் தொகை கொண்டது துபாய்.

6. இங்கே ஒட்டகச் சவாரி பிரபலம்.

7. தலைநகரமும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் அபுதாபி.

8. பேரீட்சை முக்கிய விளைபொருள்.

9. ஓமானுக்கும் சவுதி அரேபியாவுக்கு இடையே அமைந்துள்ளது.

10. அரபிக், பாரசீகம், ஆங்கிலம், இந்தி, உருது மொழிகள் பேசப்படுகின்றன.

விடை: ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in