

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு.
2. இதன் தலைநகர் கராகஸ்.
3. விடுதலைப் போராட்ட வீரரும் ராணுவத் தலைவரும் அரசியல்வாதியுமான சிமோன் பொலிவார் தேசத் தந்தையாகக் கருதப்படுகிறார்.
4. 1811-ல் தனது சுதந்திரத்தை அறிவித்த முதல் ஸ்பானிய- அமெரிக்கக் காலனிகளில் இதுவும் ஒன்று.
5. மிகப்பெரிய எண்ணெய்க் கிணறுகளைக் கொண்ட நாடு.
6. ராட்சத எறும்புத்தின்னி, அமேசான் டால்பின் போன்றவை இந்த நாட்டின் சிறப்பு உயிரினங்கள்.
7. பல நாடுகள் அடிமை முறையை ஒழிப்பதற்கு முன்பாகவே 1854-ல் இந்த நாடு அதைச் சாதித்துக் காட்டியது.
9. உலகின் மிக உயரமான ஏஞ்சல் அருவி இங்குதான் உள்ளது.
10. தேசியக் கொடியில் உள்ள மஞ்சள் வண்ணம் நில வளத்தையும், நீலம் ஸ்பெயினிடமிருந்து பெற்ற விடுதலையையும், சிவப்பு விடுதலைப் போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தத்தையும் குறிக்கின்றன.
விடை: வெனிசுலா