

உலகிலேயே குட்டியூண்டு நாய் எங்கு இருக்கிறது தெரியுமா? அமெரிக்கா அருகே உள்ள போர்ட்டோ ரிக்காவில். இங்குள்ள வன்சே ஸீம்லர் என்பரிடம் உள்ளது உலகின் குட்டி நாய்.
இந்த நாயின் மொத்த உயரம் வெறும் 9.65 சென்டி மீட்டர்தான். அரை அடி ஸ்கேலைவிட மிகச் சிறியது. நாம் காசு போட்டு வைக்கும் பாக்கெட்டைவிட குட்டியூண்டு அளவில் உள்ள இந்த நாயின் எடை அரை கிலோ மட்டுமே. 2011-ம் ஆண்டு டிசம்பரில் பிறந்த இந்த நாய் கடந்த ஆண்டு நிலவரப்படி இந்த அளவுக்குத்தான் வளர்ந்திருக்கிறது.
உலகின் மிகவும் குட்டி நாய் என்ற சிறப்புடன் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இதற்கு இடம் கிடைத்துவிட்டது. நாயின் உயரத்தையும் அளவையும் பார்த்த நாயின் உரிமையாளர் இதற்கு வைத்த பெயர் என்ன தெரியுமா? மிராக்கிள் மில்லி (அதிசய மில்லி).
பொருத்தமான பெயர்தான்!