நீங்களே செய்யலாம்: உங்கள் வீட்டில் வேற்றுக் கிரகவாசி

நீங்களே செய்யலாம்: உங்கள் வீட்டில் வேற்றுக் கிரகவாசி
Updated on
2 min read

நாம வசிக்கிற இந்த கிரகத்தோட பேரு பூமி. இதைப் போலவே உள்ள வேறு கிரகங்களில் யாராவது இருக்காங்கன்னு அடிக்கடி யாராவது சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? உண்மையில் வேற்றுக் கிரகவாசி எப்படி இருப்பார்? யாருக்கும் தெரியாது. நாம கற்பனையா ஒரு வேற்றுக் கிரகவாசிய உருவாக்கி பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்:

தடிமனான அட்டை, உலோக ஒயர், டேபிள் டென்னிஸ் பந்து 1, குண்டூசிகள் - 2, மணிகள் 2, வெள்ளைக் காகிதம், சில்வர் ஜிகினா காகிதம், சிவப்பு கம்பளித் துணி, கறுப்பு ஸ்கெட்ச் பேனா, பென்சில், பசை.

செய்முறை:

1. குண்டூசிகளின் தலைப் பகுதியில் இரண்டு மணிகளைப் பொருத்துங்கள். இவற்றை டென்னிஸ் பந்தின் மீது சொருகவும்.

2. வெள்ளைக் காகிதத்தில் இரண்டு கண்களை வரைந்து வெட்டி எடுக்கவும். பின்னர் அதை டென்னிஸ் பந்தின் மீது ஒட்டவும். இப்போது சில்வர் ஜிகினா காகிதத்தை தடிமனான அட்டைமீது ஒட்டி அதில் காதுகளை வரைந்து, அவற்றை வெட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அவற்றை டென்னிஸ் பந்தின் இரு பக்கவாட்டுகளிலும் காதுகளைப் போல் ஒட்டவும். அடுத்து சிவப்புக் கம்பளித் துணியில் வேற்றுக் கிரகவாசியின் வாயை உருவாக்கி அதை டென்னிஸ் பந்தில் கண்களுக்குக் கீழே ஒட்டுங்கள்.

3. பென்சிலைச் சுற்றிப் படத்தில் காட்டியது போல உலோக ஒயரைச் சுற்றவும். பென்சிலை மட்டும் உருவிவிட்டால் அது ஒரு ஸ்பிரிங் போல ஆகிவிடும். அதை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

4. தடிமனான அட்டையிலிருந்து சதுர வடிவம் ஒன்றை உருவாக்கவும். அதில் சில்வர் ஜிகினா காகிதத்தை ஒட்டவும். இதன் மையப் பகுதியில் நாம் ஏற்கனவே செய்துவைத்துள்ள ஸ்பிரிங்கின் ஒரு புறத்தை சொருகவும். அதன் மறுபுறத்தை டென்னிஸ் பந்தில் சொருகவும்.

இப்போது உங்கள் கையில் இருப்பது கற்பனையான வேற்றுக் கிரகவாசி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in