நேரு மொழிகள்

நேரு மொழிகள்
Updated on
1 min read

# அழகும் சாகசமும் நிறைந்த அற்புதமான உலகில் வாழ்கிறோம். நாம் கண்களைத் திறந்திருந்தால் மட்டுமே இவற்றைப் பார்க்க முடியும்!

# அறியாமையே எப்போதும் மாற்றத்தைக் கண்டு அஞ்சுகிறது.

# ஆண்டுகளை வைத்து காலத்தைக் கணக்கிட முடியாது. நாம் என்ன செய்திருக்கிறோம், எதைச் சாதித்து இருக்கிறோம் என்பதை வைத்தே காலத்தை அளவிட முடியும்.

# அச்சம் போன்று மிக மோசமான ஆபத்து ஒன்றும் இல்லை.

# முயற்சிகள் செய்துகொண்டிருப்பவர்களைத்தான் வெற்றி தேடிவரும்.

# பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in