ஏ.ஐ.யே கோடிங் செய்துவிடுமா? | ஏஐயின் இன்னொரு முகம்

ஏ.ஐ.யே கோடிங் செய்துவிடுமா? | ஏஐயின் இன்னொரு முகம்
Updated on
2 min read

வைப் கோடிங் (vibe coding) பற்றிப் பலரும் உற்சாகமாகப் பேசுகின்றனர். கோடிங் திறன் இல்லாமலே கோடிங் செய்வதன் பலனைப் பெறும் ஆற்றலைத்தான் இப்படிச் சொல்கின்றனர். இதன் பயனாக எவரும் எளிதாக இணையதளங்கள், சேவைகள், செயலிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர்.

எல்லாம் சரி, இதுவரை எத்தனை இணைய சேவைகள் வைப் கோடிங்கில் உருவாக்கப்பட்டுள்ளன? அவை உண்மையிலேயே பலன் அளிக்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கும் முன், வைப் கோடிங் பற்றிப் பார்ப்போமா?

வைப் கோடிங்

ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் எப்படிக் கதைகள், கட்டுரைகளை உருவாக்கிக் கொள்ளலாமோ, அதேபோல கோடிங்கும் செய்து கொள்ளலாம். எப்படி சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்களிடம் மனித மொழியில் கேட்டு, அதற்கான பதிலை உருவாக்க வைக்கிறோமோ, அதுபோலவே உரையாடல் முறையிலேயே கோடிங்கும் செய்யச் சொல்லலாம்.

அலிபாபா குகை முன், திறந்திடு சீசேம் என்று சொன்னால் கதவு திறப்பதுபோல, புத்தக விற்பனைக்கான அறிமுக இணையப் பக்கத்தை உருவாக்கித் தா என்று கேட்டால், கர்சர் உள்ளிட்ட ஏஐ கோடிங் சேவைகள் நாம் எதிர்பார்க்கும் இணையப் பக்கத்தை அளித்துவிடும்.

இன்னும் பல இணைய சேவைகள், செயலிகளை இதே முறையில் எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வசதியை கோடிங் திறன் இல்லாதவர்களும் பயன்படுத்தி, புரோகிராமர்கள் போலவே புதிய இணைய சேவைகள் அல்லது இணையக் கருவிகளை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. இதைத்தான் ‘வைப் கோடிங்’ என்று கொண்டாடுகின்றனர்.

மூலக் காரணம்

ஏஐ பரப்பில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான ஆண்ட்ரூ கர்பாதிதான், வைப் கோடிங் மூலவராகக் கருதப்படுகிறார். வைப் கோடிங் ஏற்கெனவே இருக்கிறது என்றாலும், இந்த வகை கோடிங் சாத்தியத்தைக் கண்டறிந்து முன்வைத்ததோடு, இதற்கு வைப் கோடிங் என்கிற பெயரைச் சூட்டியதும் அவர்தான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in