டிரெண்டிங்கில் திருமணப் புதுப்பிப்புக் கொண்டாட்டம்!

டிரெண்டிங்கில் திருமணப் புதுப்பிப்புக் கொண்டாட்டம்!
Updated on: 
2 min read

நட்சத்திரத் தம்பதியான சூர்யா - ஜோதிகா 20ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி மீண்டும் திருமணம் செய்துகொண்டது, சமூக ஊடகங்களில் வைரலானது. இப்போது டிரெண்டாகி வரும் விஷயங்களில் ‘VOW Renewal Wedding’ (திருமண உறுதிமொழிகளைப் புதுப்பித்துக்கொள்வது) என்பதும் ஒன்றாகிவிட்டது.

நம்மூரில் ஆணுக்கு 60 வயது ஆகும்போது வாய்ப்பிருப்போர் 60ஆம் கல்யாணம் (சஷ்டியப்த பூர்த்தி) செய்துகொள்வது இந்தியத் திருமணக் கலாச்சாரத்தில் ஓர் அங்கம். வெள்ளிவிழா, பொன்விழா திருமணங்கள் தனி.

ஆனால், திருமணமான தம்பதியர் திருமண வாழ்க்கை 10, 15, 20 ஆண்டுகள் (milestone years – மைல்கல் ஆண்டுகள்) நிறைவுறும்போது அதைப் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் தற்போது மீண்டும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதன் மூலம் தங்கள் அன்பு, அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறார்கள். இந்தத் திருமண உறுதிமொழியைப் புதுப்பித்துக்கொள்ளும் வழக்கம் எப்படி, எங்கிருந்து வந்தது?

பழங்காலப் பழக்கம்தான்

இதுபோன்ற திருமணங்கள் பழங்காலத்திலும் மதச் சடங்குகளாகவும் இருந்துள்ளன. வணிகரீதியாகச் சென்ற நூற்றாண்டின் மத்தியில் புகழ்பெற்றது. பழங்கால ரோமில் திருமண வாழ்க்கையின் மைல்கல் ஆண்டுகளின்போது தம்பதியர் அன்பைப் பரிமாறிக்கொள்வார்கள்.

திருமணப் பந்தத்தின் மீதான அர்ப்பணிப்பைக் காட்டும் வகையில் மீண்டும் உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். மத்திய ஐரோப்பாவில் தம்பதியர் தங்களின் திருமண உறுதிமொழியைப் புதுப்பித்துக்கொள்ள தேவாலயங்களுக்குச் சென்று மதகுருமார்களிடம் ஆசிர்வாதம் பெறும் வழக்கமும் இருந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in