ஒஹோன்னு வைரல்! | விடைபெறும் 2025

ஒஹோன்னு வைரல்! | விடைபெறும் 2025
Updated on
1 min read

* 18 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றி ‘ஈ சாலா கப் நம்தே’ ‘ட்ரோல்’களுக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்தது. என்றாலும் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தது துயரம்.

* செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏ.ஐ) மூலம் தங்களது ஒளிப்படத்தை கிப்லி முறையில் மீட்டுருவாக்கம் செய்து புது டிரெண்டை இளைய தலைமுறையினர் உருவாக்கினர். இந்தப் பயன்பாட்டுக்கு அனிமேஷன் கலைஞர்கள், ஓவியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

* இன்ஸ்டகிராம் மூலம் தங்கபாண்டி, ‘ஏங்க...’ என ஆரம்பிக்கும் ரீல்ஸ்களைப் பதிவிட்டு வைரலானதைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான கூமாப்பட்டி கிராமம் இணையத்தில் தேடுபொருளானது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in