

2025ஆம் ஆண்டில் வைரலான சில பாடல்கள்.
* அனிருத் இசையமைப்பில் ‘கூலி’ படத்தின் ‘மோனிகா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அந்தப் பாடலில் வரும் 'ஹூக் ஸ்டெப்'பைச் சாமானியரும் ஆடித் தீர்க்க, இந்த ஆண்டின் டிரெண்டிங் பாடலானது.
* 'தக் லைஃப்' இசைவெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடலின் ‘வெர்ஷன்’, தீ பாடிய ‘ஒரிஜினல்’ பாடலைவிட அதிக வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடகி சின்மயி பல ஆண்டுகளுக்குப் பிறகு 'கம்பேக்' தந்தார்.