அதென்ன ‘சிங்கிள் அகைன்’ ஸ்டேட்டஸ்?

அதென்ன ‘சிங்கிள் அகைன்’ ஸ்டேட்டஸ்?
Updated on: 
2 min read

சமூக ஊடகங்கள் இன்றைய தலைமுறையின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. பலரும் தங்கள் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் அவற்றில் பதிவிடுகிறார்கள்.

அதோடு தங்களைப் பற்றிய ‘பயோ’க்களையும் குறிப்பிடுகிறார்கள். அதில் இளைய தலைமுறையினர் பலவிதமாக தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். பல தகவல்கள் சுவாரசியமாகவும் உள்ளன. அந்த வகையில் சமூக ஊடகங்களின் ஊடாகக் கவனம் பெற்றதுதான் ‘சிங்கிள் அகைன்’ என்கிற ஸ்டேட்டஸ்.

உறவுகள்

ஒருவர் நீண்ட காலமாக இருந்த காதல் உறவிலிருந்து பிரிந்துவிட்டார், திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறி விட்டார், விவாகரத்துப் பெற்றுவிட்டார், மீண்டும் தனியாக வாழத் தொடங்கிவிட்டார் என்பதைத்தான் ‘சிங்கிள் அகைன்’ குறிக்கிறது.

சிலர் பயோவிலும் இதைக் குறிப்பிடுகிறார்கள். இன்னும் சிலர் சமூக ஊடக ஸ்டேட்டஸ்களிலும் வைக்கிறார்கள். இதன் ஒரே சாராம்சம், ‘மீண்டும் தனியாகத்தான் வாழ்கிறேன்’ என்பதே.

ஒருவர் ஓர் உறவில் இருக்கும்போது அதில் எதிர்பார்ப்புகள், பொறுப்புகள், உணர்வுகள் என எண்ணற்ற பிணைப்புகள் இருக்கும். ஆனால், அதிலிருந்து வெளியேறும்போது அது தொடர்பான மனஅழுத்தம் ஏற்படும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in