

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்கள் மனிதர்களைப் போலவே பேசுவதற்கு நம்மிடமிருந்தே கற்றுக்கொள்கின்றன என்று பார்த்தோம். ஏஐ சாட்பாட்கள் மட்டுமல்ல, பொதுவாக எல்லா ஏஐ சேவைகளுமே, மனித தரவுகளைக் கொண்டு மனிதர்களால் பயிற்சி அளிக்கப்படுபவைதான்.
ஏஐ சேவைகள் கற்றுக்கொள்வதை மனிதர்கள் கற்றுக் கொள்ளும் விதத்தில் புரிந்துகொள்ளக் கூடாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏஐ நம்மிடம் கற்றுக்கொள்கிறது என்றால், ஏஐ நுட்பத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன? இதென்ன கேள்வி என நீங்கள் நினைக்கலாம்.