

* இந்த ஆண்டு முழுவதும் ஏஐ பற்றிய பேச்சுதான். முன்னணி ஏ.ஐ நிறுவனங்களுக்குப் போட்டியாக சென்னையைச் சேர்ந்த 31 வயதான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் உருவாக்கிய ‘பெர்ஃப்ளெக்சிட்டி’ ஏ.ஐயும் இணைந்துள்ளது. 2025இல் இந்தியாவின் இளம் பில்லியனராகவும் உயர்ந்துள்ளார்.
* மதுரையைச் சேர்ந்த 16 வயதான கிரிக்கெட் வீராங்கனை கமலினி, 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடரில் (WPL) மும்பை அணிக்காக ஏலத்தில் ரூ. 1.60 கோடிக்கு வாங்கப்பட்டதால், சமூக வலைத்தளங்களில் வைரலானார். இந்திய மகளிர் டி20 அணியிலும் விளையாடத் தேர்வானார்.
* தமிழ் சுயாதீன இசையில் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் பால் டப்பா என்கிற அனீஷ். ஒரு பக்கம் திரைப்பாடல்கள், இன்னொரு பக்கம் சுயாதீன இசை உருவாக்கம் என பிஸியாக இருக்கும் இவர், இந்தாண்டில் ‘மக்காமிஷி’, ‘மாறா’ போன்ற ஹிட் பாடல்களால் கவனம் பெற்றார்.