

lடி.எஸ்.ஐரி, பாஸ் டி லீட், அலிஷன் ஷராஃபு, பென் மனென்டி, யுவராஜ் சாம்ரா
உலகக் கோப்பை டி20 தொடர் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. இணை அணிகள் (அசோசியேட் அணிகள்) என்கிற பெயரில் புதிய அணிகள் உலகக் கோப்பையில் களம் கண்டாலும் சூப்பர் 8, நாக் அவுட் போட்டிகளுக்கு வழக்கமாக கிரிக்கெட்டில் கோலோச்சும் அணிகளே தகுதி பெறும். என்றாலும், தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பைத் தொடரில் இணை அணிகளில் அசத்திய சில வீரர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
டி.எஸ்.ஐரி (நேபாளம்)
ஆசியாவில் வளர்ந்துவரும் அணிகளில் ஒன்று, நேபாளம். தீபேந்திர சிங் ஐரி எனப்படும் டி.எஸ். ஐரி இந்த அணியில் கவனிக்கப்பட்டார். உலகக் கோப்பையில் 2 அரை சதங்கள் அடித்து, 2 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் நேபாள அணி தடுமாறியபோது 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து, பொறுப்பான வீரர் என்பதை நிரூபித்தார்.
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 171 ரன்களை நேபாளம் துரத்தியபோது, ஐரி ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 50 ரன்களை எடுத்து, நேபாளத்துக்கு முதல் வெற்றியைப் பெற்றுத்தந்தார். இத்தொடரின் மூலம் நேபாள அணியின் நம்பகமான ஆல்ரவுண்டர் என்பதை ஐரி உறுதிப்படுத்தியுள்ளார்.