திருமணத்துக்கும் வந்தாச்சு ஸ்பெஷல் கோர்ஸ்!

திருமணத்துக்கும் வந்தாச்சு ஸ்பெஷல் கோர்ஸ்!
Updated on: 
1 min read

போன் செய்தால் கணவன் எடுக்கவில்லை, மனைவி உப்புமா மட்டுமே செய்து கொடுக்கிறார். இப்படிப்பட்ட காரணங்களுக்கு எல்லாம் உறவுகளை முறித்துக்கொள்ளும்போக்கு அதிகரித்துவருகிறது.

இதைப் படிப்பின் மூலம் சரிசெய்யும் முயற்சியாக கோவாவில் உள்ள ஒரு கல்லூரி சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆரோக்கியமான, நீண்ட கால திருமண/காதல் உறவுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிவுக்கான காரணங்கள்

இந்தக் காலத்தில் திருமணம் அல்லது காதல் உறவுகளில் புரிதலின்மையால் பிரிவுகள் அதிகரிக்கின்றன. கணவன் - மனைவி பிரிவுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் அவர்கள் நியாயமான காரணங்களையும் சொல்லக்கூடும்.

ஆனால், எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பம், குழந்தைகள், உறவுகள், சமூகம் என ஏதோ ஒரு காரணத்தால் கணவன் - மனைவி என்கிற பந்தத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, முந்தைய தலைமுறை வாழ்க்கையை நகர்த்தியது.

Loading content, please wait...

X