

‘டிரெண்ட்’, ‘வைரல்’ போன்றவற்றின் ஆயுள் காலம் சில மணி நேரமாகக் குறைந்துவிட்டது. என்றாலும், அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்வு, கமெண்ட் போன்றவை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகவே செய்கின்றன. அந்த வகையில் 2026இல் டிரெண்ட் ஆகும் எனக் கணிக்கப்படும் சில அம்சங்கள்:
பழசுதான் புதுசு: கடந்த சில ஆண்டுகளாகவே ‘ஸ்மார்ட் வாட்ச்’ விற்பனை கொடிக்கட்டிப் பறந்ததைப் பார்க்க முடிந்தது. ஃபிட்னெஸ், ஜிம் செல்லும் பெரும்பாலோர் இதை வாங்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால், இந்த ‘ஸ்மார்ட் வாட்ச்’ டிரெண்டிங் ஏற்கெனவே குறையத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் ஃபேஷன் நிபுணர்கள்.
மாறாக, பழைய கைக்கடிகாரங்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாகவும், இளைய தலைமுறையினரே பழைய கைக்கடிகாரங்களைத் தேடி வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்மார்ட் வாட்ச் என்பது பழைய விஷயமாக மாறி இருப்பதால், மீண்டும் முள் கைக்கடிகாரங்கள் மீதான ஆர்வம் இந்த ஆண்டு அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது!