

நாம் எதையும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம். இன்றைய காலக்கட்டத்தில் நம்முடைய தனித்துவம்தான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் ஒரு நபரோ, ஒரு தருணமோ, ஒரு நிகழ்வோ, பிறப்போ அல்லது இறப்போ நம்மை மாற்றிக்கொள்ள இடமளிப்பதும், அந்த மாறுதலும் எவ்வளவு சுவையான அனுபவத்தைத் தருகிறது, தெரியுமா? என் வாழ்க்கையில சில மனிதர்கள், சில தருணங்கள், பாடல் வரிகள், புத்தகங்கள், உரைகள் போன்றவை வாழ்க்கையை நான் அணுகும் விதத்தை மாற்றியிருக்கின்றன.