

எந்த ஊரில் இருக்கும் எந்த ஓர் இடத்துக்கும் யாரிடமும் வழி கேட்காமலும் யாரிடமும் பேசாமலும் சென்றடைந்துவிடுவது மிகச் சுலபமானது என்கிற அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால், எவ்விதத் தடையும் இன்றி லாகவமாக இலக்கை அடைந்த பிறகு என்ன செய்யப்போகிறோம்?
உத்தராகண்ட்டில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலமான மலர்ப் பள்ளத்தாக்குத் தேசியப் பூங்காவுக்கு நண்பர்களோடு அண்மையில் மலையேற்றம் செய்தேன். போகும் வழி முழுக்க நிறைய மலர்கள். நான்கு பேர் கொண்ட நாங்கள்தான் மெதுவாக ஏறி, கடைசியாக உச்சிக்குச் சென்றடைந்த குழு.