

உங்கள் வாழ்க்கையில் சேகரித்திருக்கும் விலை உயர்ந்த பொருள் எது? பொருளின் மதிப்பு அதன் விலையா அல்லது அது நமக்குத் தரும் உணர்வா? சில ஆண்டுகளாக நான் பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்து, பழைய பொருள்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்திருந்தேன்.
ஒவ்வொரு பொருளையும் வாங்கும்வரை அதன் மதிப்பு அதிகமாகத்தான் தோன்றுகிறது. வாங்கிய பிறகு நம் வீட்டில் அது ஓர் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனதில் சில கேள்விகள் எழுகின்றன. இப்போதைய வணிகம் சார்ந்த உலகில், ஒரு பொருளை வாங்கவோ அல்லது அதை வாங்க ஆசைப்படவோ ஊடகங்களின் பங்கும் உண்டு.