ஏஐ தேடலின் ஆற்றலும் போதாமையும்! | ஏஐயின் இன்னொரு முகம்

ஏஐ தேடலின் ஆற்றலும் போதாமையும்! | ஏஐயின் இன்னொரு முகம்
Updated on
2 min read

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தேடல், வழக்கமான இணையத் தேடலைவிட மேம்பட்டது எனச்சொல்லப்பட்டாலும் சிறந்ததா எனும் கேள்வி இருக்கிறது. இணையத் தேடல் எவ்வளவோ முன்னேறிவிட்டாலும், தேடலுக்கான அடிப்படை மாறாமலேயே இருக்கிறது.

இணையதளங்களை அட்டவணையாக்கி, தேடப்படும் குறிச்சொல்லுக்கு ஏற்ப அவற்றிலிருந்து பொருத்தமான முடிவுகளைப் பட்டியலிடுவதே பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

இந்த இணையத் தேடலைத்தான், ஏஐ தேடல் தலைகீழாக மாற்றியிருக்கிறது. குறிசொல் கொண்டு தேடும் அவசியமில்லாமல், உரையாடல் பாணியில் கேள்வி கேட்டு, தேவையான தகவலை நேரடிப் பதிலாகப் பெற ஏஐ தேடியந்திரங்கள் வழியமைக்கின்றன.

என்ன பிரச்சினை?

தேடல் நுட்பத்தைச் செழுமையாக்க கூகுள் உள்ளிட்ட முன்னணித் தேடியந்திரங்களில் ஏஐ நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், உரையாடல் வடிவில் தேட வழிசெய்யும் தன்மை கொண்ட சேவைகள் ஏஐ தேடியந்திரங்களாக உருவாகி, கவனத்தை ஈர்க்கின்றன. ‘பெர்பிளெக்சிட்டி’ இந்த வகை ஏஐ தேடியந்திரங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது. யூ.காம் உள்பட வேறு தேடியந்திரங்களும் இந்தப் பிரிவில் உள்ளன.

ஏன், கூகுளேகூடத் தேடல் முடிவுகளோடு ஏஐ ஓவர்வியூ மூலம் தேடலுக்கு ஏற்ற சுருக்கமான பதிலை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. சாட்ஜிபிடியிலும், இணையத்தில் தேடும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது. தேடல் முடிவுகளுக்கான நீல நிற இணைப்புகளின் பின்னே அலைந்து கொண்டிருக்காமல், பொருத்தமான தகவல்கள் சுருக்கித் தரப்படுவதோடு, தகவலுக்கான ஆதாரத் தளங்களும் இணைக்கப்படுவது ஏஐ தேடியந்திரங்களின் பயன்பாட்டை மேலும் மேம்படுத்துகிறது.

ஆக, இனி தேடலுக்கும் சாட்பாட்களையே நாடலாம். சாட்பாட்களே கோடிங் செய்யும், கட்டளைக்கேற்ற மென்பொருளை உருவாக்கும் என்று சொல்லப்படும் நிலையில், இணையத்தில் தேவையான தகவல்களையும் கேள்வி பதில் வடிவிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லப் படுவதும் இயல்பானதுதான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in