

பட உதவி: வர்வ் சலூன், சென்னை.
முகம், தலைமுடியை அழகுபடுத்துவது ‘காஸ்மெடிக்ஸ்’ உலகில் வழக்கம். ஆனால், அண்மைக்காலமாக நகங்களை அழகுபடுத்தும் போக்கு இளைய தலைமுறைப் பெண்களிடம் பிரபலமாகி வருகிறது. நகத்துக்கு வண்ணப்பூச்சு இடுவது என்னவோ பழைய விஷயம்தான். ஆனாலும் ‘நெயில் ஆர்ட்’டாக ‘அப்டேட்’ ஆகி இருப்பது புதுசு!
வரலாற்றில் ‘நெயில் ஆர்ட்’ - நகங்களுக்கு வண்ணப்பூச்சு அடிப்பது மட்டுமல்லாமல், ஏதாவது ஒரு கருப்பொருளை உணர்த்தும் வகையில் நகங்களின் மேல் குறுஓவியங்கள் வரைவதுதான்
‘நெயில் ஆர்ட்’. புத்தாயிரத்தின் தொடக்கத்திலேயே இந்த ‘நெயில் ஆர்ட்’ முறை பிரபலமாகத் தொடங்கிவிட்டது. ஆனால், புகழ்பெற்ற நடிகைகள், பாடகிகள், பிரபலங்கள் மத்தியில் மட்டுமே இந்த ‘நெயில் ஆர்ட்’ கலாச்சாரம் பரவியிருந்தது. இது விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம்.