

தீபிகா பள்ளிக்கல், ஜோஷ்னா சின்னப்பா என்று ஸ்குவாஷ் போட்டிகளில் அறியப்பட்ட வீராங்கனைகளின் வரிசையில் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார் 17 வயதே ஆன அனாஹத் சிங். அண்மையில் பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனாஹத், தரவரிசைப் பட்டியலிலும் உயரத் தொடங்கிவிட்டார்.
விளையாட்டில் திறமைசாலிகளின் இடத்தை இன்னொருவர் பிடிப்பது இயல்பானதுதான். அந்த வகையில் ஸ்குவாஷ் போட்டிகளில் வளர்ந்துவரும் இளம் வீராங்கனையாகி இருக்கிறார் அனாஹத்.