

பாத்ரூம் பாடகரான நீங்கள் மேடைப் பாடகராக மாற ஆசையா? எனில், இந்தச் செயலி உங்களுக்கானது. பாடல்களை நன்றாகப் பாட வரிகள் மட்டும் போதாது. இசையும் வேண்டுமல்லவா? அதோடு ஏற்ற இறக்கத்தோடு பாடல் வரிகளை எப்படிப் பாடுகிறார்கள் என்கிற புரிதலும் முக்கியம். மாறாக இசை இல்லாமல், பாடல் வரிகளை மட்டும் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? அதாவது, ‘Vocals’ மட்டும் கேட்க முடிந்தால்.
இன்னும் புரிந்துகொண்டு பாட சௌகரியமாக இருக்குமில்லையா? அப்படி உதவக்கூடிய ஒரு செயலி உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் ‘Moises’ என்கிற செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். செயலியின் உள்ளே சென்றபின் ‘Record’ மற்றும் ‘Add’ என இரண்டு தேர்வுகள் இருக்கும்.