பெயர்: பி.கே. என்கிற பிரசாந்த் கிஷோர்.வயது: மக்கள் அல்வா கொடுக்கும் வயது. .பழைய தொழில்: தேர்தல் வியூக மன்னர்.புதிய தொழில்: அரசியல்வாதி..நண்பர்கள்: கை நிறைய காசு கொடுத்து வெற்றிக்காக ஏங்கியவர்கள்.எதிரிகள்: வியூகத்தைப் பலிக்க விடாமல் செய்பவர்கள்.பிடித்தது: உதார் விடுவது, சவால் போடுவது.பிடிக்காதது: பிஹார் மக்கள் கடுக்காய் கொடுத்தது.விரும்பும் படம்: ‘முதல்வன்’விரும்பாத படம்: ‘தப்புக் கணக்கு’ஒரே ஆசுவாசம்: தேஜஸ்வி யாதவ்வும் காணாமல் போனது.ஒரே ஆசை: அரசியலில் பெரிய ஆளாவது.ஒரே ஆயுதம்: வாய்.ஒரே சோகம்: கணிப்புகள் பலிக்காமல் போனது.தற்போதைய சாதனை: பேசிய பேச்சுகளுக்குத் தபாய்ப்பது. நீண்ட கால சாதனை: 10 முதல்வர்களை உருவாக்கியதாக ஊரை நம்பவைப்பது.- கைப்புள்ள