பெயர்: கௌதம் கம்பீர்.பழைய பெயர்: சண்டைக்கோழி வயது: பயிற்சியாளர் ஆகும் வயதல்ல.பழைய தொழில்: கிரிக்கெட்டர், அரசியல்வாதி.புதிய தொழில்: நன்றாக இருந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை நாறடிப்பது. பிடித்தது: உள்ளூரிலேயே இந்தியாவை மண்ணைக் கவ்வவைப்பது. பிடிக்காதது: வேறென்ன, கிரிக்கெட் ரசிகர்கள் வறுத்தெடுப்பது..தெரிந்தது: தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டுவது.தெரியாதது: தலைமை பயிற்சியாளர் பணி!விரும்புவது: சிறந்த வீரர்களை தேர்வு செய்யாமல் இருப்பது. ஒரே ஆசுவாசம்: சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை வென்றது.ஒரே எரிச்சல்: முந்தைய பயிற்சியாளர்களுடன் ஒப்பிடப்படுவது.ஒரே சவால்: பொட்டலமாகும் டெஸ்ட் அணியை மீட்பது. ஒரே சோகம்: ஒரே நேரத்தில் மாஜி வீரர்கள் வசைபாடுவது.சமீபத்திய சாதனை: இந்தியாவை ஒயிட் வாஷ் செய்யவைத்தது.நீண்டகால சாதனை: சிறந்த பயிற்சியாளர் என்று நம்பவைத்திருப்பது.- கைப்புள்ள.வானூர் திமுக நிர்வாகி மீதான பாலியல் வழக்கில் சாட்சியங்களை சேகரிப்பதாக போலீஸ் தகவல்