பெயர்: டைரக்டர் ராஜகுமாரன்.ஊருக்குத் தெரிந்த பெயர்: தேவயானி புருஷன்..வயது: சினிமாவிலிருந்து `ஃபீல்டு அவுட்’ ஆகும் வயதல்ல.தொழில்: அப்போ டைரக்டர், இப்போ விமர்சகர்..தெரிந்தது: தன் காதல் கதையைத் தைரியமாகப் படமாக்கியது. தெரியாதது: காமெடியனாகக் கரணம் அடித்தது.விரும்புவது: கே டிவியில் போடும் பழைய (சூப்பர் குட்) படங்கள். விரும்பாதது: ஓடிடியில் வரும் புதிய படங்கள்.நண்பர்கள்: 90ஸ் கிட்ஸ் எதிரிகள்: ஜென் இசட் கிட்ஸ் பிடித்தது: சினிமாவில் சாதித்தவர்களை வசைபாடுவது.பிடிக்காதது: ட்ரோல் செய்து கிண்டலடிப்பவர்கள். எதிர்பார்ப்பது: யூடியூப் பேட்டிகளை. பழைய சாதனை: தேவயானியின் 75ஆவது படத்தை இயக்கியது.தற்போதைய சாதனை: திடீரென சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் ஆனது. நீண்டகால சாதனை: நான்கு படங்களை டைரக்ட் செய்தது.- இம்சையரசன்.பேஜார்பீடியா: கௌதம் கம்பீர் | பிரபலங்கள் மன்னிக்கவும்