பாம்புக் கடியில் மட்டும்தான் நஞ்சு இருக்கிறதா?

பாம்புக் கடியில் மட்டும்தான் நஞ்சு இருக்கிறதா?
Updated on
3 min read

இந்தியாவில் ‘விஷம்’ என்றால் பெரும்பாலும் பாம்புக் கடியால் ஏற்படும் மரணங்களை நாம் நினைவுகூருகிறோம். இது இந்தியக் கிராமப்புறங்களில் மிகவும் தீவிரமான சுகாதாரச் சிக்கலாக உள்ளது. ஆண்டுக்கு ஏறக்குறைய 50,000க்கும் மேற்பட்டோர் பாம்புக் கடியால் உயிரிழக்கிறார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு நலத்திட்டங்கள், நஞ்சுமுறிவு மருந்துகள் எல்லாம் பாம்புக் கடியை மட்டும் மையமாகக் கொண்டிருக்கின்றன.

ஆனால், நஞ்சு / விஷம் என்பது தீங்கு விளைவிப்பது பற்றியது மட்டுமல்ல. ‘Trends in Ecology & Evolution’ என்கிற அறிவியல் இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வு, விஷம் என்பது இயற்கையில் வெகு விரிவாகப் பல உயிரினங்களில் பரவியுள்ளது என்றும், பல இடங்களில் முற்றிலும் வியப்பூட்டும் விதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறுகிறது.

பிரிட்டன், நார்வேயைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்தக் கூட்டு ஆய்வில், நஞ்சை ஓர் எச்சரிக்கையான ஆயுதமாக மட்டுமல்ல, ஓர் ஆற்றல்வாய்ந்த உயிரியல் கருவியாகவும் புதிதாக வரையறுக்க வேண்டிய தேவை உள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில், நஞ்சு என்பது ஓர் உயிரினம் மற்றோர் உயிரினத்தின் உடலுக்குள் செலுத்தும் வேதிப்பொருள்.

அதன் செயல்பாட்டை மாற்றி, வேதிப்பொருளைச் செலுத்தும் உயிரினத்திற்கு நன்மை தரும் வகையில் நஞ்சு செயல்படுகிறது. இதனால் கொசுக்கள், செடியை உறிஞ்சும் பூச்சிகள், இனப்பெருக்கக் காலத்தில் நத்தைகள், மண்புழுக்கள் போன்றவற்றில் ‘மறைந்துள்ள நஞ்சுகள்’ உள்ளன என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இந்தப் புதிய அறிவியல் பார்வை, நஞ்சு என்பது பாம்பு, தேள்கள் மட்டுமல்ல, அது நம் சுற்றுப்புறத்தில் எங்கும் இருப்பதாகக் கூறுகிறது. செடியை உறிஞ்சும் பூச்சிகள் முதல் இணையைக் கட்டுப்படுத்தும் நத்தைகள் வரை, நஞ்சு எங்கும் இருக்கிறது - மேலும், எதிர்கால மருந்துகளுக்கும் இது வழிகாட்டியாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in