சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ‘ஸ்டாண்ட்-அப்’ பண்ணணும் | காபி வித் ‘விக்கல்ஸ்’ விக்ரம்

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ‘ஸ்டாண்ட்-அப்’ பண்ணணும் | காபி வித்  ‘விக்கல்ஸ்’ விக்ரம்
Updated on
2 min read

‘ஸ்டாண்ட் அப் காமெடி’, ‘ரெக்கார்டிங் ஸ்டுடியோ’ நகைச்சுவை காணொளிகள் மூலம் வைரலானவர் ‘விக்கல்ஸ்’ விக்ரம்.

‘பிக்பாஸ் சீசன் 9’இல் போட்டியாளராகக் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பிடித்த விக்ரம் சில இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். ஒரு மாலை வேளையில் ‘காபி’யோடு விக்ரமுடன் நிகழ்ந்த சுவாரசியமான உரையாடல்.

Q

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?

A

இரவு 10 மணிக்கு உறங்கி காலை 5 மணிக்குள் எழுந்துவிடும் ‘மார்னிங் பெர்சன்’ங்க. ‘ஷூட்டிங்’ நாள்களில் மட்டும் கொஞ்சம் மாறும்.

Q

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா?

A

தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். ‘டயட்’டைக் கோட்டைவிடுவதுதான் என்னுடைய பலவீனமே. யோசிக்காம நல்லா சாப்பிடுவேன்.

Q

தனித்துவமான பழக்கம்?

A

எந்நேரமும் ‘ஜோக்’ பற்றிய யோசனைதான்.

Q

இந்த வேலை இல்லையென்றால்?

A

சட்டம் படித்திருப்பதால் வழக்கறிஞர் ஆகியிருப்பேன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in