‘பீனிக்ஸ் வீழான்’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சூர்யா சேதுபதி.
‘நடுசென்டர்’ இணையத்தொடரில் நடித்திருக்கும் அவரை ஒரு மாலை வேளையில் சந்தித்தபோது நடந்த சுவாரசியமான உரையாடல்:
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?
எத்தனை மணிக்குத் தூங்கினாலும் காலையில ஆறு, ஏழு மணிக்கே எழுந்திரிச்சிடுவேன்.
‘ஒர்க் அவுட்'டா, ‘டயட்'டா?
ஜிம்லதான் 'ஒர்க் அவுட்' பண்ணணும்னு அவசியம் இல்ல. எல்லாச் சத்துகளும் உள்ள உணவைச் சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் போதும். மற்றபடி ஸ்பெஷலா ஒன்றும் கிடையாது.
தனித்துவமான பழக்கம்?
‘டர்ட் பைக்’ ஓட்டப் பிடிக்கும்.
மறக்க முடியாத நாள்?
‘பீனிக்ஸ் வீழான்’ ரிலீஸான நாள்.
இந்த வேலை இல்லையென்றால்?
சிவில் இன்ஜினீயர் ஆகியிருப்பேன். இந்நேரத்துக்குப் பத்துக் கட்டிடம் கட்டியிருப்பேன்!
எதிர்காலத் திட்டம்?
ஏதேனும் ஒரு விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கணும்.
உடற்பயிற்சியில் கற்றுக்கொண்டது?
ஒழுக்கம், 'கன்சிஸ்டன்சி' , சின்னச்சின்ன விஷயங்களும் ரொம்ப முக்கியம்.
அடுத்த படம்?
ஜாலியான காமெடி படத்தில் நடிக்கப்போறேன்.
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா?
படம் அதிகமா பார்ப்பேன். புத்தகம் படிக்கிற பழக்கம் இல்லை.
பிடித்த சமூக வலைத்தளம் எது, ஏன்?
சோஷியல் மீடியாவை ஏனோ எனக்குப் பிடிக்கிறதில்லை. நேரத்தை அதிகமா முழுங்குது! அந்த நேரத்தை வேறு எதற்காகவாவது செலவழிக்கலாம்.
பிடித்த விஷயங்கள்?
நண்பர்களோட அவுட்டிங் போறது. ஃபிபா 'வீடியோ கேம்' விளையாடுவது.
வாழ்க்கையின் 'சீக்ரெட்' மந்திரம்?
யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருந்தால், நம் வாழ்க்கை நல்லா இருக்கும்.