அங்கே ஒரே ‘வைப்’தான்! - காபி வித் நியதி

அங்கே ஒரே ‘வைப்’தான்! - காபி வித் நியதி
Updated on
2 min read

‘96’ படத்தில் பள்ளிப் பருவத் தோற்றத்தில் அறிமுகமாகி வரவேற்பைப் பெற்று, ‘ராணி - தி ரியல் ஸ்டோரி’ என்கிற மலையாளப் புலனாய்வு த்ரில்லர் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து, புகழ்பெற்றவர் நியதி.

அண்மையில் வெளியான ‘LBW: Love Beyond Wicket’ இணையத்தொடரிலும் நடித்திருக்கும் அவருடன் ஒரு சுவாரசியமான உரையாடல்.

Q

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?

A

எல்லாரும் தூங்கும்போது அதிகாலையில் எழுந்து உலகத்தைப் பார்ப்பது பிடிக்கும். நான் பக்கா ‘மார்னிங் பர்சன்’ங்க!

Q

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா?

A

‘ஒர்க் அவுட்’ செய்துவிட்டு ‘டயட்’ எடுக்காமல் இருந்தாலும், ‘டயட்’ எடுத்துவிட்டு ‘ஒர்க் அவுட்’ செய்யாமல் விட்டாலும் எந்தப் பலனும் கிடைக்காது. இரண்டுமே முக்கியம் பிகிலு! தோற்றத்துக்காக அல்ல, ஆரோக்கியத்துக்காக உடற்பயிற்சி செய்யணும்.

Q

தனித்துவமான பழக்கம்?

A

வேலையிலும் உடற்பயிற்சியிலும் ‘கன்சிஸ் டென்சி’யைக் கடைப்பிடிப்பது.

Q

மறக்க முடியாத நாள்?

A

அண்மையில் எனது கனவுப் படத்துக்கான ‘ஆடிஷன்’ல வென்ற நாள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in