வீடியோ ஜாக்கியாக தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கி, ‘குக் வித் கோமாளி’யில் புகழ்பெற்று, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டவர் கெமி. நடிப்பு, விளையாட்டு, நடனம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பரபரப்பாக இருக்கும் அவரோடு ஓர் உரையாடல்..சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?நான் ‘நைட் பர்சன்’. ஷூட்டிங் இருக்கும்போது ஓரிரு மணிநேரம்தான் தூங்குவேன்..‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா?ஒரு காலத்தில் இந்தியாவுக்காகக் கூடைப்பந்து விளையாடும் போது செம ஒர்க்-அவுட் பண்ணிட்டு இருந்தேன். இப்போ மாசத்துல ஒரு முறைதான் ஜிம் பக்கமே தலை காட்டுறேன். நீச்சல் அடிக்க ரொம்பப் பிடிக்கும்..தனித்துவமான பழக்கம்?நேர்மையா இருக்கணும். ‘Never give up’ இதுதான் என்னுடைய ‘பெஸ்ட் குவாலிட்டி’..மறக்க முடியாத தருணம்?இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சது..இந்த வேலை இல்லையென்றால்?கூடைப்பந்து பிளேயர் ஆகியிருப்பேன். ஆனால், ‘பாலிடிக்ஸ்’ காரணமாக அது விட்டுப்போச்சு..எதிர்காலத் திட்டம்?சொந்த வீட்டில் வாழ்ந்ததே கிடையாது. என் காசுல ஒரு வீட்டை எப்பிடியாச்சும் வாங்கிடணும். உலகம் முழுக்கச் சுத்திப் பார்க்கணும்..புத்தக வாசிப்பா, திரை அனுபவமா?வாசிக்கிறதைவிட நிறையப் படங்கள் பார்ப்பேன்..விளையாட்டா, நடனமா?விளையாட்டுதான். பேஸ்கெட் பால்தான் எப்பவுமே!.பிடித்த சமூக வலைதளம் எது, ஏன்?இன்ஸ்டகிராம்னாலதான் என் வேலையே ஓடுது. யூடியூப்ல அதிகமா பாட்டுக் கேட்பேன்..வாழ்க்கையின் ‘சீக்ரெட்’ மந்திரம்?வாழ்வதே சாப்பிடத்தானே!.மறக்க முடியாத நபர்?வினோத், என்னுடைய வழிகாட்டி. அவர்தான் வீடியோ ஜாக்கியாகச் சொல்லித் தந்தார். அவராலதான் நான் இவ்ளோ தூரம் வந்திருக்கேன்..மறக்க முடியாத நாள்?அப்பாவுக்கு இறுதிச் சடங்கு செய்தது. பொண்ணுங்கிறதுனால சடங்குகள் பண்ண விடல, நான் சண்டைபோட்டு அதைச் செஞ்சதை மறக்க முடியாது..இதுதான் நான்?மனசுக்குள்ள எதுவும் வச்சிக்க மாட்டேன். நேரடியா பேசிடுவேன்..திரும்பத்திரும்பப் போக விரும்பும் இடம்?கோயில், சர்ச். எம்மதமும் சம்மதம்..பிக்பாஸுக்குப் பிறகான வரவேற்பு?நிறைய அன்பு கிடைச்சுது. வேலை, ஈவென்ட்ஸ்னு நிறைய வாய்ப்புகள் இப்போ வருது..- ஏழுமலை பூங்கார்ச்சுனன், பயிற்சி இதழாளர்.நான் காலேஜ் டி.ஜே! | காபி வித் அர்ஜுன் அசோகன்