ஆடினே இருப்பேன்! | காபி வித் மணி சந்திரா

ஆடினே இருப்பேன்! | காபி வித் மணி சந்திரா
Updated on
2 min read

‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் நடனக் கலைஞராக அறிமுகமாகி, ‘ஜோடி சீசன் 9’ல் பங்கேற்றுப் பட்டத்தை வென்றவர் மணி சந்திரா.

‘கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 1’, ‘பிக்பாஸ் சீசன் 7’ போன்ற ‘ரியாலிட்டி ஷோ’விலும் கலந்துகொண்டு வரவேற்பைப் பெற்றவர்.

அண்மையில் வெளியான ‘ஹாப்பி ராஜ்’ படத்தின் மூலம் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகியுள்ள மணி சந்திராவுடன் சுவாரசியமான ஓர் உரையாடல்.

Q

‘மார்னிங் பர்சன்’னா, நைட் ‘பர்சன்’னா?

A

‘டான்ஸ் பயிற்சி’ இரவிலும் வருகிறது. அதனால் இரவு பகல் பாராமல் வேலை செய்யும் ‘ஒர்க் பர்சன்’ங்க.

Q

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா?

A

நடனமாடுவதற்கு ‘ஸ்டாமினா’வை அதிகரிக்க ‘கார்டியோ’ பயிற்சி செய்வேன். ஓரளவு ‘டயட்’ பின்பற்றுகிறேன்.

Q

தனித்துவமான பழக்கம்?

A

‘சீரியஸா’ன சூழ்நிலையில் சிரித்து விடுவதும், நிறைய ‘நோட்ஸ்’ எடுப்பதும்.

Q

இந்த வேலை இல்லையென்றால்?

A

கிரிக்கெட் வீரர் ஆகி யிருப்பேன். தல தோனியின் ரசிகன் நான்.

Q

எதிர்காலத் திட்டம்?

A

அகில இந்திய ‘டான்ஸ் மாஸ்டர்’ ஆகணும். சினிமாவில் நடிக்கணும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in