

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் அபிக்ஞான் குண்ட்டூ 209 ரன்கள் குவித்தது இணையத்தில் பேசுபொருளானது. மலேசிய அணிக்கு எதிரான போட்டியில் 125 பந்துகளை எதிர்கொண்ட அபிக்ஞான் 209 ரன்களைக் குவித்தார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக தனிநபர் விளாசிய ரன் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஜோரிச் வான் ஷால்க்வி 215 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.