

உலகக் கோப்பை கால்பந்துக் காய்ச்சல் உலகெங்கும் தொற்றிக்கொண்டுவிட்டது. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்தியா கலந்துகொண்டதில்லை, தகுதி பெற்றதும் இல்லை.
என்றாலும் கால்பந்து விளையாட்டை ஆராதிக்கும் கேரளம், மேற்கு வங்கம், கோவா, வட கிழக்கு மாநிலங்கள் உள்படப் பல பகுதிகளிலும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை வரவேற்க வழக்கம்போல இந்தியர்கள் காத்திருக்கிறார்கள்.
பிரேசில், அர்ஜென்டினா, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற அணிகளுக்கு இந்தியாவில் ஆதரவு இருப்பதைக் காணலாம். இப்போது அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் ஜூன் 11 அன்று தொடங்க உள்ள கால்பந்துப் போட்டிகளின்போது வேறு சில அணிகளுக்கும் இந்தியர்கள் ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குக் காரணம், இந்தியா, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் உலகக் கோப்பை கால்பந்துத் தொடரில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாட இருப்பதுதான்.