பிட்ச் ரிப்போர்ட் என்ன சொல்லுது? - எனக்கு மட்டும் ஏன்? | தருணம் 12

பிட்ச் ரிப்போர்ட் என்ன சொல்லுது?  - எனக்கு மட்டும் ஏன்? | தருணம் 12
Updated on
2 min read

ஒரு பழைய சண்டைக் காட்சி. ஏறக்குறைய ஏழடி உயரமுள்ள வீரன் கோலியத். 100 பவுண்ட் எடை கொண்ட கவசத்தை அணிந்திருந்தான். வாள், கேடயம், ஈட்டி, வேல் சகிதம் இருப்பான். எதிரில் டேவிட் என்னும் சிறுவன். கவண் கற்கள்தான் அவன் பயன்படுத்திய ஆயுதம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், டேவிட் பயன்படுத்திய ஆயுதம் வேறொன்றும் இருக்கிறது.

‘கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக்கல் ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர்’ என்று தேம்பாவணியில் வீரமாமுனிவர் நேரடித் தொலைக்காட்சி உரையாற்றும் முன், இதோ நண்பர் ஒருவர் சண்டையிடுவதைப் பார்த்து வரலாம்.

“50,000 ரூபாய் கொடுங்க, போறோம்.” “எதுக்குத் தரணும்?” “இல்லீன்னா காலி பண்ண மாட்டோம். எனக்கு ஒரு 50, இவனுக்கு ஒரு 50 கொடுத்தே ஆகணும்.” “எந்த நேரத்துல உங்களப் பாத்தேனோ?” கத்தினார் நண்பர். அந்த இருவரும் பணத்தை வாங்காமல் போக மாட்டார்கள்.

விஷயம் இதுதான். ஆண்கள் யாரும் இப்போது முழுதாக முகச்சவரம் செய்துகொள்வதில்லை. தாடி வளர்க்கிறார்கள். முன்பெல்லாம் ஏதேனும் விழாக்கள், நிகழ்ச்சிகள் என்றால் தாடி நீக்கி சவரம் செய்து செல்வார்கள்.

ஆனால், இப்போதோ கல்யாணம் போன்ற சுபநிகழ்வுகளில்கூடத் தாடியுடனேயே காணப்பட வேண்டும் என்று நாகரிக விதிகள் தெளிவாகக் கூறுவதால், தாடியுடன் காட்சியளிக்கும் ஆண்களிடம், “என்னாச்சு, உடம்பு சரியில்லையா?” என்கிற கேள்வியும் இப்போதெல்லாம் கேட்கப்படுவதில்லை.

“மட்டன் சாப்ஸ், சின் கர்ட்டெய்ன், சின் ஸ்ட்ராப், பால்போ பியர்டு, இம்பீரியல் பியர்டு என விதவிதமான தாடிகள். விலையுயர்ந்த செடி ஒன்றைப் பராமரிக்கும் நேர்த்தியோடு, அதைச் சீர்திருத்தி பராமரிக்க வேண்டியுள்ளது. சலூன்காரர்கள் தாடிகளை விதவிதமாகச் சீரமைக்கிறார்கள்; கலை வண்ணத்துடன் மெருகேற்றுகிறார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in