அவரவருக்கான யானைகள்! - எனக்கு மட்டும் ஏன்? | தருணம் 17

அவரவருக்கான யானைகள்! - எனக்கு மட்டும் ஏன்? | தருணம் 17
Updated on
3 min read

சேவியருக்கு ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனையாளர் வேலை. ஆனால், அவர் ஒரு கைக்குட்டையைக்கூட எடுத்துப் போட்டதில்லை. வாடிக்கையாளர்களை உரிய பிரிவுக்கு அனுப்புதல், தெரிந்தவர்களுக்குக் கூடுதலாக ஒரு கட்டைப்பை அளித்தல், பரபரப்பாக வேலை செய்வதுபோல் காட்சியளித்தல் என்றே இயங்கிவந்தார்.

ஏனென்றால் கடை முதலாளி சேவியரின் பால்ய நண்பர். முதலாளியிடம் சடுகுடு, பம்பரக் காலங்கள் உயிரோடு இருந்ததால், அறிவிக்கப்படாத முதலாளியாகக் கடையில் சேவியர் உலவிவந்தார். ஆனால், முதலாளியின் காலத்துக்குப் பிறகு வந்த கடை வாரிசு, கடையைச் சுத்தப்படுத்துகிறேன் என்று இறங்கியதில், குப்பைகளோடு தானும் வெளியே போய் விழுந்துவிடுவோமோ என்று சேவியர் நடுங்கத் தொடங்கினார்.

அதுவரை, பூமியில் சக்கரம் பதிக்காமல் சென்றுகொண்டிருந்த சேவியரின் தேருக்கு, என்ன ஆயிற்று என்பதைப் பின்னர் பார்க்கலாம். ஆனால், சேவியரின் வாழ்க்கையில் புதிய முதலாளி வந்து சென்ற இந்தப் பக்கம் எதைக் காட்டுகிறது?

ஹிப்பாகிரடீஸின் பெயரால்தான் மருத்துவ மாணவர்கள் ‘தேவையின்றி டெஸ்டுகளைப் பரிந்துரைக்க மாட்டோம்; மருத்துவ கம்பெனிகளின் வலைகளில் சிக்கமாட்டோம்’ என்றெல்லாம் உறுதிமொழி எடுப்பார்கள். வரலாற்று நூல்களின் தந்தை ஹிரோடோடோஸ், சாக்ரடீஸ், பிளேட்டோ எல்லாருக்கும் சொந்த நாடு எது? கிரேக்கம்.

அன்றைய கிரேக்கம் கலை, இலக்கியம், மருத்துவம், வீரம், தத்துவம், விளையாட்டு என எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியது. இன்றைய நாகரிகம், அரசியல், சட்ட அமைப்புகளிலும்கூட அன்றைய கிரேக்கத்தின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது. பண்டைய தமிழ் வரலாற்றின்படி உறையூர் பிரசித்தி பெற்ற நாடாக இருந்திருக்கிறது. முற்காலச் சோழர்கள் இங்கிருந்துதான் ஆண்டார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in