இங்க இதுதான் வழக்கம்னு சொல்லாதீங்க! - எனக்கு மட்டும் ஏன்? - தருணம் 5

இங்க இதுதான் வழக்கம்னு சொல்லாதீங்க! - எனக்கு மட்டும் ஏன்? - தருணம் 5
Updated on
2 min read

மணி ஹெய்ஸ்ட் - இந்த சீரீஸில் ஒரு பேராசிரியர், ‘டோக்கியோ, பெர்லின், மாஸ்கோ’ என உலகின் முக்கிய ஊர்ப் பெயர்களைக் கொண்ட ஒரு குழுவுடன் படாத பாடுபட்டு, வங்கியைக் கொள்ளையடிக்கையில், “எனது வங்கியில் நடந்த நகைத்திருட்டு ஒரே ஒரு ஆளால் அடிக்கப்பட்டது, தெரியுமா?” என்று கேட்டார் ஒரு நண்பர். “ஒரு பெண்ணால், அதுவும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு பெண்ணால்” என்றார்.

எப்படி?

அது ஒரு கிராமத்து வங்கி. அந்தப் பெண் வங்கியின் பணியாளர்கூட இல்லை. தரையைக் கூட்டுதல், டீ வாங்கி வருதல், அதிகாரிகளுக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்ய ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்த பெண். மேலாளர்கள், காசாளர்கள் வந்தார்கள்; சென்றார்கள்.

அந்த உதவியாளர் மட்டும் மாறவே இல்லை. அந்த அளவு அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, “யம்மா, அந்த ரிமிட்டென்ஸ் சலான் எடு, இந்த ரிஜிஸ்டரை அங்கே வை, லாக்கர் ரூம் கீயை எடுத்துட்டு வா” என்று ஆல்ரவுண்டராக அவர் பணியாற்றிவந்தார்.

“நற்குணங்களுக்கும் எல்லைகள் உண்டு அல்லவா? திடீரென பணம் தேவைப்பட்டதில், வங்கியின் லாக்கர் அறை வரை அனுமதிக்கப்பட்டிருந்த சுதந்திரத்தில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த நகைகளை, எப்போது எடுத்தார், எப்படி எடுத்தார் என்றுகூடத் தெரியாது. எடுத்துவிட்டு கம்பி நீட்டிவிட்டார்...

“அப்புறம்..?” “விசாரணை நடந்திட்டு இருக்கு” என்ற நண்பர் சலிப்புடன், “அவரை ஏன் லாக்கருக்குள் அனுமதித்தாய் என்றுதான் என்னைக் கேக்குறாங்க. அது இந்த வங்கில பல வருசமா உள்ள நடைமுறை வழக்கம்ணு சொன்னா யாரும் கேக்க மாட்டேங்குறாங்க” அது ஒரு “எ.ம.ஏ?” கணம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in