

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் புயல், மழையைப் பற்றிய விவாதம்தான் சமூக வலைத்தளங்களில் ஓங்கி ஒலிக்கும். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கு அல்ல. தானே, வர்தா, ஒக்கி தொடங்கி டிட்வாவரை அதே நிலைமைதான்.
இந்தப் புயல்களைப் பற்றி நொந்து கொள்ள விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும் இணையத்தில் குறும்புகளுக்கும் வம்புகளுக்கும் பஞ்சமே இல்லை.