

சிறந்த காதலைப் பற்றி ஒவ்வொருவருக்குமே தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம். அதிலும் ஒரு பெண் என்றால் இப்படித்தான் ஆணிடம் நடந்துகொள்ள வேண்டும் எனச் சில கற்பிதங்களைச் சமூகம் வரையறுத்து வைத்துள்ளது. அந்தக் கற்பிதங்களை அப்படியே தங்கள் காதலி பின்பற்ற வேண்டும் என்று காதலர்களில் சிலர் எதிர்பார்ப்பதால், தங்கள் காதலை இழந்துவிடுகின்றனர்.
உண்மையில் சிறந்த காதலராக இருக்க என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது? எப்போதுமே காதலிக்கும் நபர்மீது உடைமை உணர்வு, உரிமை உணர்வு ஏற்படுவது இயல்பானதுதான்.
அதற்காக, அவரின் வாழ்க்கையில் நாம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் நியாயம் இல்லை. காதலிக்கு வேறு யாரும் நண்பர்களே இருக்கக் கூடாது என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.