

ஆடியோ பிளேயரோ, ஆடியோ செயிலியோ திறன்பேசியை ‘லாக்’ செய்துவிட்டுப் பாடலைக் கேட்க முடிகிறது. அதுபோல் வீடியோவை லாக் செய்து பயன்படுத்த முடியுமா? காணொளிகளைப் பார்க்கும்போது திறன்பேசியை ‘லாக்’ செய்துவிட்டால் கலர்கலராகத் தெரிந்த காணொளி நின்று கறுப்புத் திரைதான் தெரியும்.
இன்று யூடியூபில் பாடலையோ, திரைச் சித்திரத்தையோ கேட்டுக் கொண்டே வேலை செய்வோர் அதிகரித்துவிட்டார்கள். நாம் ஒரு காணொளியைத் தேர்வு செய்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கேட்கும்போது, ரிப்பேர் ஆன ரேடியோபோல் தானாக அடுத்தடுத்த காணொளிக்கு மாறிக்கொண்டே இருக்கும்.
சரி, நாம் யூடியூப் பார்க்க வேண்டும், பாக்கெட்டில் வைத்தால் காணொளிகளும் மாறக் கூடாது. இதற்கு என்னதான் தீர்வு? அதற்கென்றே ஒரு செயலி இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் ‘பிளாக் ஸ்கிரீன்’ (Black screen) என்கிற செயலியால் இது சாத்தியமாகும்.