

“இன்னிக்கு நான் லேட்டா வந்தத எங்க மேனேஜர் பாக்கும் முன்னாடி, நைசா உள்ள வந்துட்டேன்..” “பாத்திருந்தா அவன் கடிக்குற கடீல அரை கிலோ சதை காணாம போயிருக்கும்... குட் ஜாப் ப்ரோ..!” இந்த ‘நைசா...’ என்னும் வார்த்தையை நிறைய நண்பர்களும், நண்பிகளும் அன்றாட வாழ்வில் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
“நைசா.. பாக்காத மாதிரி வந்துட்டேன்..” “நைசா.. நழுவி வந்துட்டேன்..” “நைசா.. எஸ்கேப்..” பெரும்பாலும் ‘நைசா’ என்னும் வார்த்தை நேர இருக்கும் சிறு இம்சை, வலி, சிறு வசவு ஆகியவற்றிலிருந்து நமது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி எந்தச் சேதாரமும் இன்றித் தப்பித்து வருவதைக் குறிக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள விஷயங்களை ஆராயும் முன் ஒரு பி.ஜி.க்குப் போய் வருவோம்.
எந்த பி.ஜியில் கொடுக்கிற காசுக்குச் சுவையாகச் சாப்பாடு கொடுக்கிறார்கள்? இதை, ‘சாம்பார்’னு சொன்னா தெய்வ குத்தம் ஆயிரும், ப்ரோ... வாங்க, பக்கத்துல தட்டுக்கடைக்குப் போகலாம்.” தெருவோரத் தட்டுக் கடைகளில் ஜிபே செய்யாத இளைஞர் கூட்டம் இல்லை.
இத்தனைக்கும், இந்தத் தெருவோர குக், செஃப்கள்... பெரும்பாலும் சமையல் சார்ந்த எந்தப் படிப்புகளையும் படித்திருக்க மாட்டார்கள். ஆயிரக்கணக்கானோருக்குச் சமைத்துத் தருகிற ஆற்றல், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? ஒரு தெருவோர டீக்கடையின், கற்றுக்குட்டியின் முதல் டீ - சர்க்கரை, பால் அதிகம் / குறைவு.
பத்தாவது டீ - இன்னும் கொதிக்க வேண்டும். இருபதாவது டீ - ஓ.கே. ஐம்பதாவது டீ - இஞ்சி டீயா, மசாலா டீயா, புதினா டீயா? முதல் டீயின் தவறுகளிலிருந்து தப்பிக்கவில்லை என்றால், நூறாவது டீயைக் கடவுளுக்குப் பரிமாறலாம்! “ஜி, கடவுள் உங்க ரெகுலர் கஸ்டமர்..” இந்தத் தேநீர் தயாரிப்பு முறையையும் ‘நைசா’ என்னும் வார்த்தை யையும் சம்பந்தப் படுத்திப் பார்ப்போம்.