உலா வரும் ஏஐ உல்டா! | ஏஐயின் இன்னொரு முகம்

உலா வரும் ஏஐ உல்டா! | ஏஐயின் இன்னொரு முகம்
Updated on
2 min read

இணைய உலகில் ஸ்பேம் எனும் குப்பை மின்னஞ்சல்கள் பிரச்சினை இன்னமும் இருக்கிறது. ஆனால், பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதற்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நுட்பம்தான் மூலக்காரணம். மனிதத் தலையீடு இன்றி, நம் முகவரிப் பெட்டிகளில் ஏஐ நுட்பம் பொறுப்பாகக் கண்காணித்து, குப்பை மின்னஞ்சல்களை வடிகட்டிவிடுகிறது.

விளம்பர நோக்கில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் வார்ப்புகளையும் வடிவங்களையும் உள்சொற்களையும் எடுத்துக்காட்டிவிட்டால், அவற்றைக் கொண்டு தேவையற்றதை ஏஐ மென்பொருள் விரட்டிவிடுகிறது.

ஆனால், இந்த நுட்பம் கோட்டைவிடும் தருணங்களும் உண்டு. என்றாலும், குப்பை மின்னஞ்சல் கவலை குறைந்துவிட்டது. இதே பிரச்சினை இப்போது உள்ளடக்க உலகில் நிகழத் தொடங்கியிருப்பதை ஏஐ பெருங்குப்பை உணர்த்துவதைப் பார்த்தோம்.

இந்தப் போக்கின் சமகாலப் பாதிப்பும் எதிர்கால விபரீதமும் திகைக்க வைக்கின்றன. ஜென் ஏஐ மூலம் நொடிப்பொழுதில் உருவாக்கக்கூடிய படங்களும் ஆக்கங்களும் பார்ப்பதற்கு உண்மையான தோற்றத்தைக் கொண்டிருக்கலாம்.

ஆனால், அவை உண்மை அல்ல. மாயத் தோற்றங்கள் மட்டுமல்ல பிழை உருவங்கள், தகவல் போலிகள். ஏஐ பெருங்குப்பையில்தான் எத்தனை ரகங்கள். தட்டையான கட்டுரைகள், ‘கிளிக்’ தூண்டில் படங்கள், பொய்யான படங்கள், உண்மையைத் திரித்துக்காட்டும் ஆழமான போலிகள், செயற்கை வீடியோக்கள்... அப்பப்பா.

ஆழ்போலிகள்

இது முற்றிலும் புதிய பிரச்சினை அல்ல. பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தலைப்புகளைக் கொண்ட, மேம்போக்கான உள்ளடக்கம் ஏற்கெனவே இணைய உலகில் குவிந்துகிடக்கிறது. தேடியந்திரங்களின் கடைக்கண் பார்வையைப் பெறும் வகையில் மலிவான உத்திகளைக் கொண்ட இத்தகைய ஆக்கங்களை உள்ளடக்கப் பண்ணைகள் உருவாக்கித் தள்ளுகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in