சாட்பாட்கள் சொல்லும் பொய்கள்! | ஏஐயின் இன்னொரு முகம்

சாட்பாட்கள் சொல்லும் பொய்கள்! | ஏஐயின் இன்னொரு முகம்
Updated on
2 min read

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களின் செயல்திறனில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதிலும், அடுத்தடுத்த வடிவங்களில் சாட்பாட்களின் செயல்திறனும் மேம்பட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. அதற்கேற்ப சாட்பாட்களின் பயன்பாடும், அவற்றைச் சார்ந்திருக்கும் தன்மையும் அதிகரித்துவருகின்றன.

தகவல்களைத் தேடுவது முதல் திட்டமிடல்வரை பலவற்றுக்கும் ஏஐ சாட்பாட்களைப் பயன்படுத்துவதும் பரவலாகி இருக்கிறது. ஒரு சமூகமாக ஏஐ சாட்பாட்களுக்கு நாம் பழகிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றின் நம்பகத்தன்மை தொடர்பான முக்கியக் கேள்வியும் எழுகிறது.

ஏஐ சாட்பாட்கள் அளிக்கும் பதில்கள் எந்த அளவு நம்பகமானவை எனும் அடிப்படையில் இந்தக் கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதில் ஏஐ சாட்பாட்களின் போதாமையைச் சுட்டிக்காட்டுவதோடு, அவை தொடர்பான நம் அணுகுமுறையில் உள்ள பிரச்சினைகளையும் உணர்த்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏஐ சாட்பாட்கள் பல நேரம் தவறான பதில்களை அளிக்கலாம் என்பது மட்டுமல்ல, பிழையான தகவல் கொண்ட பதில்களை அவை மிகுந்த நம்பிக்கையோடு முன்வைப்பதுதான் உண்மையில் பிரச்சினை.

சாட்பாட் ஆய்வு: கேள்விகளுக்கு சாட்பாட்கள் பொருத்தமற்ற அல்லது தவறான பதில்களை அளித்துள்ளது ஏற்கெனவே பல தருணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாட்பாட்கள் அளித்த தவறான தகவல்கள் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தக் குறைகளைக் களைவதற்காகவே சாட்பாட்களுக்குப் புதிதாகப் பயிற்சி அளிக்கப்பட்டு தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in