இது ஏஐ காட்டிய வழியம்மா! | ஏஐயின் இன்னொரு முகம்

இது ஏஐ காட்டிய வழியம்மா! | ஏஐயின் இன்னொரு முகம்
Updated on
2 min read

பயண ஏற்பாட்டுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகளை நாடலாமா? ஆனால், காலாவதியான தகவல்கள் அல்லது தவறானவற்றை எதிர்கொள்ளலாம். நம்பிக்கையாக இல்லாத தகவல்களை வழங்குவது, நிகழ் நேர நிலவரம் தொடர்பான புரிதல் இல்லாமல் அல்லாட வைப்பது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளலாம்.

அதேபோல உள்ளூர் நிலவரம் தெரியாமல், பழைய பரிந்துரைகளை வழங்கலாம். நீங்களும் அதை நம்பிப் போனால், குறிப்பிட்ட ஹோட்டல் மூடப்பட்டிருக்கலாம் அல்லது ரயில் ரத்தானதைக் கண்டு திகைக்க நேரலாம்! பயணத் திட்டமிடலுக்காக ஏஐ சேவைகளைப் பயன்படுத்தும்போது இவையெல்லாம் ஏற்படலாம்.

இப்படி எல்லாம் நடக்குமா என்கிற சந்தேகம் இருந்தால், ஏஐ பயணத் திட்டமிடல் தொடர்பான இந்த எச்சரிக்கை குறிப்புகளை எல்லாம் வழங்குவது வேறு யாருமல்ல, சாட்ஜிபிடிதான். ஏஐ மூலம் பயணங்களைத் திட்டமிடுவதில் உள்ள பிரச்சினைகள் என்னவென்று கேட்கப்பட்டபோது, முன்வைக்கப்பட்ட பதிலின் ஒரு பகுதிதான் இது.

கூகுளின் ஜெமினியும் இதேபோன்ற பதிலை வழங்குகிறது. பயணத் திட்டமிடலில் ஏஐ சேவைகளை நம்பாதே என்று ஏஐ சாட்பாட்கள் சொல்வது ஒரு பக்கம் முரண்நகையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ஏஐ பயன்பாடு தொடர்பான நிதர்சன உண்மையாகவும் அமைகிறது.

சாட்ஜிபிடி சொன்னது... சாட்ஜிபிடியின் அருமை பெருமைகள் பற்றிப் பேசப்படும் போதெல்லாம், பயனாளிகள் தனிப்பட்ட விருப்பத்துக்கு ஏற்ப, கச்சிதமாகப் பயண நிகழ்ச்சி நிரலைத் திட்டமிட்டு தரும் ஆற்றல் ஏஐ சாட்பாட்களுக்கு இருப்பதாகச் சொல்லப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

அடுத்த கட்டமாக, பயணத் திட்டமிடல் மட்டுமல்ல, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட எல்லாவற்றையும் ஏஐ பயண ஏஜெண்ட் சேவை கவனித்துக்கொள்ளும் என்று ஏஜெண்டிக் ஏஐ சேவைகள் சார்ந்து அண்மை காலமாகப் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

அப்படியிருக்க, பயணத் திட்டமிடலுக்கு ஏஐ சேவைகளை நாடுவதற்கு எதிரான கருத்துகள் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தலாம். குழம்புவதற்கு பதில், எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப முக்கியம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in