ஏசி மால்களும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளும்

ஏசி மால்களும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளும்
Updated on
2 min read

சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் இளைஞர்களும் இளம் பெண்களும் அதிகம் கூடும் இடங்களில் வானுயர்ந்த மால்களுக்கும் நிச்சயம் இடம் உண்டு. ஷாப்பிங் செய்யக் கடைகள், சினிமா பார்க்க மல்டி பிளக்ஸ், பிடித்த உணவைச் சுவைக்க ஸ்நாக்ஸ் கடைகள் என ஒரே குடையின்கீழ் எல்லாமும் கிடைக்கின்றன.

அதனாலேயே இளைஞர்கள் மால்களை நாடிவருவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இதில் பியூட்டியே, பல இளைஞர்கள் மாலுக்கு வருவது ஷாப்பிங் செய்வதற்காக அல்ல என்பதுதான்.

ஈர்க்கும் மால்கள்

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மால்களுக்கு வருவதற்கு முக்கியக் காரணம், ‘இன்னைக்கு நான் மால்ல இருக்கேன்’ என்று ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி, ரீல்ஸ் பதிவேற்றுவதற்காகத்தான். பெரும்பாலும் மாலுக்குள் நுழைந்ததுமே தவறாமல் செய்யும் முதல் வேலை, ஸ்டைலாக போஸ் கொடுத்து செல்ஃபி எடுப்பதுதான்.

இப்படி செல்ஃபி, ரீல்ஸ் எடுப்பதற்கு ஏற்ற வகையிலே மால்களும் இருக்கின்றன. மால்களில் மக்களை, குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகளை ஈர்க்க பல புதுமையான முயற்சிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப் படுகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in