

சமூக ஊடகங்களில் அவ்வப்போது ஏதாவது ‘டிரெண்ட்’ ஆவது வழக்கம். அந்த வரிசையில் அண்மைக் காலமாகவே செயற்கை நுண்ணறிவுத் (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காணொளிகள், வரிசைகட்டி வைரலாகின்றன. இந்தக் காணொளிகள் உண்மையா, டூப்பா என்று நினைக்கும் அளவுக்கு இருப்பதால் பார்வையாளர்கள் குழப்பத்துக்கும் ஆளாகவே செய்கிறார்கள்.
என்றாலும் திறன்பேசியில் ஸ்க்ரால் செய்யும்போது பார்க்கத் தூண்டும் இந்தக் காணொளிகள் ‘வியூ’ஸை அள்ளுகின்றன. குறிப்பாக, விலங்குகள் சார்ந்த ஏஐ காணொளிகள் சமூக ஊடங்கங்களின் டைம் லைனில் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன.