

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களுக்கு நன்றி சொல்வது தொடர்பான விவாதம் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, நினைவிருக்கிறதா? உரையாடலின் முடிவில் சாட்பாட்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா என்கிற குழப்பம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
இந்தக் கூடுதல் சொற்களால் ஆற்றல் வீணாவதாகச் சொல்லப்படும் ஏஐ செயலாக்கத்திறனும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாட்பாட்களும் இதே போன்ற மனிதத்தன்மை அம்சங்களை ஓர் உத்தியாக கையாள்வதாகச் சொல்லப்படுவதை அறிவீர்களா?