78 நாட்கள் போதும் உலகைச் சுற்ற!

78 நாட்கள் போதும் உலகைச் சுற்ற!
Updated on
1 min read

உலகை வேகமாகச் சுற்றி வருபவருக்கே ஞானப்பழம் என்ற புராண காலத்து கதையெல்லாம் கிடையாது இது. உண்மையிலேயே உலகை வேகமாகச் சுற்றி வந்திருக்கிறார் ஸ்காட்லாந்து இளைஞர் ஒருவர். அதுவும் வெறும் 78 நாட்களிலேயே சுற்றி வந்திருக்கிறார் 34 வயதான மார்க் ப்யூமான்ட்.

கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி உலகம் சுற்றக் கிளம்பினார் இவர். ஐரோப்பா கண்டத்தில் பயணத்தைத் தொடங்கிய இவர், ரஷ்யா, மங்கோலியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய கண்டங்கள் வழியாக வலம் வந்து தனது பயணத்தை செப்டம்பர் மாதத்தில் நிறைவுசெய்தார். மொத்தமே 78 நாட்களில் உலகம் சுற்றும் பயணத்தை சைக்கிளில் சென்று சாதித்துக் காட்டியிருக்கிறார் இவர். இதற்காகத் தினமும் 16 மணி நேரம் சைக்கிளை ஓட்டியிருக்கிறார்.

இதற்கு முன்பு நியூசிலாந்தின் ஆண்ட்ரூ நிக்கோல்சன் 123 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வந்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் மார்க் ப்யூமான்ட். இந்தப் பயணம் மூலம் சேர்ந்த நிதியைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கவும் உத்தேசிக்கிறார் ப்யூமான்ட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in